அதிகாரம் – 12 – குறள் – 119

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். விளக்கம்:- செப்பம் சொற்கோட்டம் இல்லது – நடுவுநிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் – அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின். கடந்த குறளிலே கூறிய கருத்தே இக்குறளிலும் வருகிறது. வீட்டிலோ அல்லது நீதிமன்றத்திலோ வழக்கு என்று வந்துவிட்டால் நீதிபதி தனது தீரப்பை உறுதியாக் கூறவேண்டும். எந்த வார்த்தையையும் புரட்டாமல் சொல் தவறாமல் கூறவேண்டும். மனதிலே புரட்டு இருந்தால் சொல்லிலும் […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 112

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப் புடைத்து. விளக்கம்:- செப்பம் உடையவன் ஆக்கம் – நடுவு நிலைமையை உடையவனது செல்வம், சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – பிறர் செல்வம் போல அழிவு இன்றி அவன் வழியிலுள்ளார்க்கும் வலியாதலை உடைத்து. செப்பம் – நடுவுநிலைமை. ஏமாப்பு – பலம். நடுவுநிலைமை தவறாமல் சேர்த்த செல்வம் நமக்கும் நமது சந்ததிக்கும் பலத்தைக் கொடுக்கும். அறநெறி தவறிச் சேர்த்தச் செல்வம் அழிவையே தரும். எச்சத்திற்கும் ஏமாப்பு உடைத்து […]

Continue Reading