அதிகாரம் – 13 – குறள் – 122

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. விளக்கம்:- உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாக் காக்க – ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. முதல் ஐந்து குறள்களிலும் அடக்கத்தின் சிறப்பைப் பற்றிப் பொதுப்பட கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆக்கம் (ஆக்கப்பட்டது) – செல்வம். நமது மனம், மொழி, மெய்களை நமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அடக்கம் என்று முதல் குறளிலே பார்த்தோம். […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 117

கெடுவாக வையா துலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. விளக்கம்:- நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – நடுவாக நின்று அறத்தின்கண்ணே தங்கினவனது வறுமையை, கெடுவாக வையாது உலகம் – வறுமை என்று கருதார் உயர்ந்தோர். நடுவு நிலைமையோடு இருந்தும் வறுமை வந்தால் அதற்குத் திருவள்ளுவர் என்ன கூறுகிறார்? என்று இக்குறளில் பார்க்கலாம். ஊழின் காரணமாக வறுமை வந்தால் கவலைப்படக்கூடாது. ஏனென்றால், “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்கிறது தொல்காப்பியம். எனவே உயர்ந்தவர்கள் நடுவுநிலைமையோடு இருப்பவர்கள் வறுமையில் […]

Continue Reading

அதிகாரம் – 12 – குறள் – 113

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். விளக்கம்:- நன்றே தரினும் – தீங்கு அன்றி நன்மையே பயந்ததாயினும், நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல் – நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக. திருக்குறளிலே ஆக்கம் என்ற சொல் சில இடங்களில் செல்வம் என்ற பொருளில் வரும். இக்குறளிலே ஆக்கம் என்பது செல்வமாகும். நடுவுநிலைமை தவறி வந்தச் செல்வம் நன்மையைத் தந்தாலும் கூட அதை நஞ்சென்று கருதி உடனே […]

Continue Reading

அதிகாரம் – 9 – குறள் – 84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந் தோம்புவான் இல். விளக்கம்:- செய்யாள் அகன் அமர்ந்து உறையும் – திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும், முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் – முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். விருந்து செய்தால் செல்வம் குன்றுமா? என்று கேள்வி வருகிறது. கடந்த குறளிலே விருந்தை தினந்தோறும் செய்பவர்களின் வீட்டிலே வறுமை வராது என்று கூறினார். இந்தக் குறளிலே முகமலர்ச்சியோடு விருந்தினரைப் பேணி விருந்து செய்யும் போதுத் திருமகளே […]

Continue Reading