அதிகாரம் – 8 – குறள்- 75

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம்:- ஒரு நல்ல பயனை அடைய வேண்டுமானால் அதற்குக் கடின உழைப்பு தேவை. அதுபோலவே நல்ல பயனைப் பெற்றுக்கொள்ளக் கடின உழைப்பு இல்லாத விடயங்களும் உண்டு. இதைத்தான் இக்குறள் கூறுகிறது. இந்த உலகத்திலும் மனைவி, பிள்ளைகள், உறவுகள், நட்புகள் என்று இன்பமாக வாழ்ந்து அதன் பயனாக அடுத்தப் பிறவியிலும் சொர்க்கத்திற்குப் போகலாம். இதற்கு அன்பு முதன்மைத் தேவையாயிருக்கிறது. அன்பைப் பெருக்கிக் கொண்டால் போதும். அன்பு உற்று அமர்ந்து […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன். விளக்கம்;- இருவிதமான பயன்கள்;- இம்மைப் பயன் – மனிதனுக்குக் கிடைக்கும் புகழ் இம்மைப் பயனாகும். மறுமைப் பயன் – சொர்க்கம், மோட்சம் என்று இரண்டும் மறுமைப் பயனாகும். சொர்க்கம்;- இன்னொரு புவனத்திலே வாழ்வது சொர்க்கம். தேவர்கள் முதலானோர் இங்கேதான் இருக்கின்றனர். மோட்சம்;- இறையடியைச் சேர்வது மோட்சம். ஞானியர் இங்கேதான் இருக்கின்றனர். கடந்த ஐந்து குறள்களிலும் கூறிய பதினொரு கடமைகளையும் செய்து மனைவியில் அன்பு கூர்ந்து பழியஞ்சிப் பொருள் […]

Continue Reading