அதிகாரம் – 10 – குறள் – 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. விளக்கம்:- யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு – எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு, துன்புஉறூஉம் துவ்வாமை இல்லாகும் – துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். முதல் இரண்டு குறள்களிலும் கூறப்பட்ட இன்முகமும் இன்சொல்லும் உடையவர்களாக நாம் இருந்தால் என்ன பயன் கிடைக்கும்? இதற்கு விடையளிக்கிறது இக்குறள். நாம் பார்க்கிறவரகள் எல்லோரிடமும் இன்முகம் காட்டி இன்சொல்லையேப் பேசுவோமானால், நமது வாழ்வில் துன்பத்தைத் தருவதாகிய வறுமை இல்லாமல் போகும் […]
Continue Reading