அதிகாரம் – 13 – குறள் – 123

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந் தாற்றின் அடங்கப் பெறின். விளக்கம்:- அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் – ‘அடங்குதலே நமக்கு அறிவாவது’ என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின், செறிவு அறிந்து சீர்மை பயக்கும் – அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும். அடக்கம் என்பது எல்லா அறங்களுக்கான ஆணி வேராகும். மனம், மொழி, மெய்கள் மூன்றனையும் தமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய அடங்குதலே நமக்குத் துணையாகிய அறிவு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். […]

Continue Reading