அதிகாரம் – 11 – குறள் – 104
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். விளக்கம்:- தினைத்துணை நன்றி செயினும் – தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும், பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார் – அதனை அவ்வளவிற்றாகக் கருதாது , பனையளவிற்றாக்க் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார். பெறுகிறவனுடைய தன்மையிலும் உதவியின் தரம் தங்கியிருக்கிறது. இதற்கு அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி கொடுத்த வரலாறு மிகச்சிறந்த உதாரணமாகும். மலையுச்சியில் இருந்த நெல்லிக்கனியை உண்டால் இருநூற்று நாற்பது வருடம் உயிர் வாழலாம் என்று தெரிந்தும் […]
Continue Reading