அதிகாரம் – 2 குறள் – 18
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. விளக்கம்;- தேவர்களுக்கும் மழை தேவை என்று கூறுகிறார். மழை பெய்யாது வானம் வறண்டு போகுமானால் கோவில்களிலே திருவிழாவும் (சிறப்பு) நடக்காது. அன்றாட பூசையும் நடக்காது. கோவில்களிலே இரண்டு விதமான வழிபாடு நடக்கும். நித்தியம் நைமித்திகம் நித்தியம் என்பதற்கு பூசனை என்று பெயர். நைமித்திகம் என்பதற்கு சிறப்பு என்று பெயர். நித்தியம் என்பது அன்றாடம் செய்யும் பூசை. நைமித்திகம் என்பது அன்றாடம் செய்யும் நித்திய பூசையிலே குறைவுகள் வரக்கூடாது […]
Continue Reading