அதிகாரம் – 10 – குறள் – 94

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. விளக்கம்:- யார்மாட்டும் இன்புஉறூஉம் இன்சொலவர்க்கு – எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு, துன்புஉறூஉம் துவ்வாமை இல்லாகும் – துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். முதல் இரண்டு குறள்களிலும் கூறப்பட்ட இன்முகமும் இன்சொல்லும் உடையவர்களாக நாம் இருந்தால் என்ன பயன் கிடைக்கும்? இதற்கு விடையளிக்கிறது இக்குறள். நாம் பார்க்கிறவரகள் எல்லோரிடமும் இன்முகம் காட்டி இன்சொல்லையேப் பேசுவோமானால், நமது வாழ்வில் துன்பத்தைத் தருவதாகிய வறுமை இல்லாமல் போகும் […]

Continue Reading

அதிகாரம் – 8 – குறள் – 74

அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. விளக்கம்:- அன்பு ஆர்வம் என்ற கன்றை ஈனும். அந்தக் கன்றும் நட்பு என்ற கன்றைப் போடும். இதைப்போலவே அன்பு நமக்குள் இருந்தால் மற்றவர்களை மேல் ஆர்வம் பிறக்கும். அந்த ஆர்வத்தினால் நட்பு பிறக்கும். அன்பு ஆர்வமுடைமை ஈனும் – ஒருவனுக்குத் தொடர்புடையார் மாட்டுச்செய்த அன்பு, அத்தன்மையாற் பிறர்மாட்டும் விருப்பமுடையைத் தரும். ஒருவர் மீது நாம் அன்பு செலுத்த ஆரம்பித்தால் அவர் சார்ந்த மற்றவர்கள் மீதும் நமக்கு ஆர்வம் […]

Continue Reading