அதிகாரம் – 7 – குறள் – 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். விளக்கம்;- எழுபிறப்பு என்பதிலே இரு அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது. முதலாவது அர்த்தம்;- ஒருவனுடைய சாயல் ஏழு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. ஏழாவது தலைமுறையிலே தலைமுறை மாற்றப்பட்டுவிடும். இப்படி ஒருவனுடைய சாயல் ஏழாம் தலைமுறையோடு முடியப்போகிறது. எழுபிறப்பு என்பது ஒருவனுடைய தொடர்ச்சியான அவன் நிலை நிற்கக்கூடிய ஏழு இடங்கள். ஏழுதலை முறை வரைக்கும் இவனுடைய அடையாளம் மற்றும் பண்பு இருக்கும். இரண்டாவது அர்த்தம்;- பிறப்பேழாவன;- ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம் நீர்ப்பறவை […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 45

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது விளக்கம்;- அன்பு பண்பாகவும் அறம் பயனாகவும் இருப்பதே இல்லறம். அன்பும் அறனும் பண்பும் பயனும் மேலே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் கீழே சொல்லப்பட்ட முதல் சொல்லையும் இணைத்துப்பார்க்க வேண்டும். அதுபோலவே மேலே உள்ள இரண்டாவது சொல்லையும் கீழே உள்ள இரண்டாவது சொல்லையும் இணைத்துப் பார்க்க வேண்டும். இதற்கு நிரல் நிறை என்று பெயர். இல்வாழ்க்கையில் அன்பே முக்கியம். கணவர் மனைவியிடத்திலும் மனைவி கணவரிடத்திலும் அன்பாக இருப்பதை இரு […]

Continue Reading