அதிகாரம் – 14 – குறள் – 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. விளக்கம்:- ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க – ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்து ஓம்பித் தேரினும் துணை அஃதே – அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, ‘இவற்றுள் இருமைக்கு துணையாவது யாது?’ என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய முடிவது அவ்வொழுக்கமே ஆகலான். உயிரை விடவும் ஒழுக்கம் மேலானது என்று முதல் குறளிலே படித்தோம். அப்படி உயர்வான ஒழுக்கத்தைப் பேணியும் வருந்தியும் கூட காக்க […]

Continue Reading