அதிகாரம் – 12 – குறள் – 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். விளக்கம்:- செப்பம் சொற்கோட்டம் இல்லது – நடுவுநிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறின் – அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின். கடந்த குறளிலே கூறிய கருத்தே இக்குறளிலும் வருகிறது. வீட்டிலோ அல்லது நீதிமன்றத்திலோ வழக்கு என்று வந்துவிட்டால் நீதிபதி தனது தீரப்பை உறுதியாக் கூறவேண்டும். எந்த வார்த்தையையும் புரட்டாமல் சொல் தவறாமல் கூறவேண்டும். மனதிலே புரட்டு இருந்தால் சொல்லிலும் […]
Continue Reading