அதிகாரம் – 10 – குறள் – 93

முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். விளக்கம்:- முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி – கண்ட பொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி, அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் – பின் நண்ணிய வழி மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். கடந்த குறளில் கூறியதையே இக்குறளிலும் மிகவும் அழுத்தமாகக் கூறுகிறார். முதாலவது முகமலர்ச்சி இரண்டாவது இன்சொல் மூன்றாவது தான் கொடுத்தல். இவைகள் நமது மனதில் மிகவும் அழுத்தமாகப் பதியவேண்டும் என்பதற்காகவே […]

Continue Reading