அதிகாரம் – 14 – குறள் – 134

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். விளக்கம்:- ஓத்து மறப்பினும் கொளலாகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். கல்வியாளராகிய பிராமண வருணத்தைச் சேர்ந்தவர் தான் கற்ற வேதத்தினை மறந்தாலும் பின்பு அதனைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் தவறிப் போவாராயின் அவர் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவராகி விடுவார். […]

Continue Reading