அதிகாரம் – 4 – குறள் – 39

அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம் புறத்த புகழு மில. விளக்கம்;- அறத்தால் (இல்லறத்தால்) வருவதே இன்பம் என்கிறார். அடுத்த அதிகாரம் இல்லறவியல் எனவே அதற்கு முகப்புக் கட்டுகிறார். அறத்தான் வருவதே இன்பம் – அறத்தோடு வருவதே இன்பம் என்று இருக்க வேண்டும். இங்கே ஒடு உருபுக்குப் பதிலாக ஆன் உருபு வருகிறது. ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக் கண் வந்தது. இப்படி வரலாமா? என்று கேட்டால் வரலாம் அதற்கு புறநானூற்றுச் செய்யுளை மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர். தூங்கு […]

Continue Reading