அன்புடைமை

பரிமேலழகரின் அதிகார முன்னுரை அஃதாவது, அவ்வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கட் காதலுடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம், இனிது நடத்தலும், பிறவுயிர்கண்மேல் அருள் பிறத்தலும், அன்பின் பயனாகலின், இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத் துணை மேல் அன்பில் வழி இல்லற மினிது நடவாமை. “அறவோர்க் களித்தலு மந்ததண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலுந்த தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை” சிலப்பதிகாரம் – கொலைக்களக்காதை வரிகள் – 71 -73 என்பதனானும் அதனாலருள் பிறத்தல்” அருளென்னு மன்பீன் […]

Continue Reading