அதிகாரம் – 8 – குறள் – 79

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு. விளக்கம்:- யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – யாக்கையகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்புடையர் அல்லாதார்க்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் – ஏனைப்புறத்தின்கண் நின்று உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன உதவியைச் செய்யும்? புறத்துறுப்பெல்லாம் என்ன செய்யும் என்பதே பொருளாகும். என்ன என்பதற்கு எவன் என்பது பொருள். இது அக்காலத்தியப் பிரயோகம். நாம் கற்கின்ற அதிகாரம் இல்லறவியல். எனவே புறத்துறுப்பு என்பது உடலில் […]

Continue Reading