அதிகாரம் – 9 – குறள் – 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. விளக்கம்:- வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை, பருவந்து பாழ்படுதல் இன்று – நல்குரவான் வருந்திக் கெடுதல் இல்லை. வருவிருந்து – தன்னைநோக்கி வந்த விருந்தை வைகல் – நாள்தோறும் புறந்தருவானது (புறந்தருதல்) – பாதுகாத்தல் விருந்தினரை உபசரித்து உணவளிப்பது ஒரு நாள் மட்டும் செய்ய வேண்டிய கடமை அல்ல. நாள்தோறும் தவறாது செய்ய வேண்டிய கடமையாகும். […]
Continue Reading