நடுவு நிலைமை

அஃதாவது, பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை. இது நன்றி செய்தார்மாட்டு அந்நன்றியினை நினைத்த வழி சிதையுமன்றே? அவ்விடத்துஞ் சிதையலாகாது என்றற்குச் செய்ந்நன்றி அறிதலின் பின் வைக்கப்பட்டது. மூன்று வகையான உறவு நிலைகள் உண்டு. இந்த மூவரிடத்தும் நடுவுநிலைமையோடு நடந்துகொள்ளும் திண்மை இருக்கவேண்டும். இம்மூவரையும் சமமாக நினைத்து நடத்த வேண்டும். ஒருவர் செய்த நன்மையை நினைத்தால் இந்த இடத்தில் நடுவுநிலைமை சிதையும். எனவேதான் செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத்திற்குப் […]

Continue Reading

அதிகாரம் – 10 – குறள் – 92

அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். விளக்கம்:- அகன் அமர்ந்து ஈதலின் நன்று – நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று, முகன் அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் – கண்டபொழுதே முகம் இனியனாய் அதனோடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின். விருந்து என்ற அதிகாரத்தில் ஏற்கெனவே நாம் கற்றுக்கொண்டபடி விருந்து என்பது முதலில் இன்முகம் காட்டுவது; இன்சொல் பேசுவது; கொடுப்பது. இதில் எது முக்கியமானது என்று வள்ளுவர் எடுத்துக்கூறுகிறார். இக்குறளிலே […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 62

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். விளக்கம்;- எழுபிறப்பு என்பதிலே இரு அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது. முதலாவது அர்த்தம்;- ஒருவனுடைய சாயல் ஏழு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. ஏழாவது தலைமுறையிலே தலைமுறை மாற்றப்பட்டுவிடும். இப்படி ஒருவனுடைய சாயல் ஏழாம் தலைமுறையோடு முடியப்போகிறது. எழுபிறப்பு என்பது ஒருவனுடைய தொடர்ச்சியான அவன் நிலை நிற்கக்கூடிய ஏழு இடங்கள். ஏழுதலை முறை வரைக்கும் இவனுடைய அடையாளம் மற்றும் பண்பு இருக்கும். இரண்டாவது அர்த்தம்;- பிறப்பேழாவன;- ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம் நீர்ப்பறவை […]

Continue Reading