இரு பெயரொட்டுப் பண்புத்தொகை என்றால் என்ன?

ஒரு பொருளுக்கு பொதுப்பெயர் என்ற ஒன்றும் இருக்கும். சிறப்புப் பெயர் என்ற ஒன்றும் இருக்கும். இவ்விரு பெயர்களையும் சேர்த்துச் சொல்வதே இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாகும். விளக்கம் ;- பூ என்பது பொதுப்பெயர். இந்த பொதுப்பெயரோடு மல்லிகை என்ற சிறப்புப்பெயரையும் சேர்த்துச் சொல்லும்போது அது மல்லிகைப்பூ என்று இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகிறது.

Continue Reading