அதிகாரம் – 13 – குறள் – 122
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. விளக்கம்:- உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாக் காக்க – ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. முதல் ஐந்து குறள்களிலும் அடக்கத்தின் சிறப்பைப் பற்றிப் பொதுப்பட கூறியிருக்கிறார் வள்ளுவர். ஆக்கம் (ஆக்கப்பட்டது) – செல்வம். நமது மனம், மொழி, மெய்களை நமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அடக்கம் என்று முதல் குறளிலே பார்த்தோம். […]
Continue Reading