வாழ்க்கைத் துணை நலம்

முன்னுரை;- அறம் இரண்டு கூறாகப் பிரிக்கப்படுகிறது. இல்லறம் – பற்றுவதும் அறம். துறவறம் – பற்றை விடுவதும் அறம். இல்லறத்திலே முதிர்ந்தவர்களுக்குத்தான் துறவறம். எனவே முதலில் பயிலப்பட வேண்டியது இல்லறம். பெரும்பான்மையானோருக்கு உரியதும் இல்லறமே. துறவறம் என்பது ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைந்தவர்களுக்கு உரியது. இல்லறத்திலே முதிர்ச்சியடைய வேண்டும். அந்த முதிர்ச்சியைத் தருவது திருக்குறளின் இல்லறவியல். திருக்குறள் மனிதனைச் செதுக்க வல்லது. இல்லறத்தானுக்கு பதினோரு கடமைகளை வகுக்கிறார் வள்ளுவர். இந்தக் கடமைகள் அனைத்தையும் அறத்தின் வழியே நின்று செய்ய வேண்டும். […]

Continue Reading

அதிகாரம் – 6 – குறள் – 51

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டார் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. விளக்கம்;- மனைவிக்கான இலட்சணத்தை இக்குறளில் வரையறை செய்கிறார். நல்ல மனைவியினிடத்தில் மனைத்தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் இருக்க வேண்டும். மனைத்தக்க மாண்பு;- இல்லறத்திற்குரிய நற்பண்பு இல்லறத்திற்குரிய நற்செய்கை இந்த இவ்விரண்டு குணங்களும் இல்லாதவள் மனைவியல்ல. கணவருடைய வருமானத்துக்குள்ளே வாழ்கிறவளே பெண். இன்றைய உலகமயமாக்கலில் இந்தப்பண்பு காணாமல் போய்விட்டது என்று எண்ணுகிறேன் நான். ஆடம்பரத்திற்காக மற்றவர்களைப் பார்த்து நாம் வாழப் பழகுகிறோம். இது தவறு. நற்பண்பு;- (நல்ல) துறவிகளைப் […]

Continue Reading