அதிகாரம் – 10 – குறள் – 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின். விளக்கம்:- நல்லவை நாடி இனிய சொலின் – பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுவமாயின், அல்லவை தேய அறம் பெருகும் – அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும். பிறருக்கு நல்லவை நடக்க வேண்டும் என்று நாம் மனதால் நல்லச் சொற்களை இனிமையாகக் கூறவேண்டும். அல்லவை தேய அறம் பெருகும் என்பது குறள். அப்படியென்றால் அல்லவை என்பது மறம் ஆகும். […]

Continue Reading

அதிகாரம் – 7 – குறள் – 63

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும். விளக்கம்;- முதல் குறளிலே குழந்தைப் பேற்றினுடைய சிறப்பைச் சொன்னார். இரண்டாவது குறளிலே அந்தப் பிள்ளைகளைப் பெறுவதினாலே கிடைக்கக்கூடிய பயனில் ஒன்றைச் சொன்னார். இந்தக் குறளிலும் இதையே வலியுறுத்துகிறார். உலகியலிலே பொருள் அவசியம். பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை என்று திருவள்ளுவரே கூறுகிறார். பொருளோ பணமோ நம்மிடம் நிலைக்க வேண்டுமானால் அதைப் போற்ற வேண்டும். அப்பொழுதுதான் அது நிலைக்கும். பிரபல எழுத்தாளர் ரோண்டா பைர்ன் எழுதிய நூல் மாயாஜாலம். […]

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 50

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும். விளக்கம்;- இல்லறத்தானுக்கு கிடைக்கும் பயன்களை இரண்டு பொருளில் கூறுகிறார் வள்ளுவர். சரியான முறையில் இல்லறம் நடத்தினால் அவன் மறுபிறவியிலே தேவர்களுக்குள் ஒருவனாக வைக்கப்படுவான். மற்றொன்று சரியான முறையில் இல்லறம் நடத்தும்போது இந்த உலகிலேயே தேவர்களுள் ஒருவனாகப் போற்றப்படுவான். எனவே, இல்லறத்தானுக்குக் கிடைக்கும் மறுமைப்பயன் தேவர்களில் ஒருவனாக வைக்கப்படுதல். இம்மைப்பயன் என்னவென்றால், அதுவே புகழ். இந்த இயலிலே இறுதியாக அதைப்பற்றி கூறப்போகிறார்.

Continue Reading

அதிகாரம் – 5 – குறள் – 46

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவ தெவன். விளக்கம்;- இருவிதமான பயன்கள்;- இம்மைப் பயன் – மனிதனுக்குக் கிடைக்கும் புகழ் இம்மைப் பயனாகும். மறுமைப் பயன் – சொர்க்கம், மோட்சம் என்று இரண்டும் மறுமைப் பயனாகும். சொர்க்கம்;- இன்னொரு புவனத்திலே வாழ்வது சொர்க்கம். தேவர்கள் முதலானோர் இங்கேதான் இருக்கின்றனர். மோட்சம்;- இறையடியைச் சேர்வது மோட்சம். ஞானியர் இங்கேதான் இருக்கின்றனர். கடந்த ஐந்து குறள்களிலும் கூறிய பதினொரு கடமைகளையும் செய்து மனைவியில் அன்பு கூர்ந்து பழியஞ்சிப் பொருள் […]

Continue Reading