அதிகாரம் – 13 – குறள் – 127

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. விளக்கம்:- யாகாவாராயினும் நா காக்க – தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க; காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர் – அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர். நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு நாமே அதிகாரியாக இருக்க வேண்டும். வார்த்தைகளைப் பேசுகின்ற போது அதன் பொருளும் சொல்லும் நமதுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல மேடைப் பேச்சிற்கும் பொருந்தும். வார்த்தைகள் நமக்கு […]

Continue Reading