அதிகாரம் – 9 – குறள் – 86

செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு. விளக்கம்:- செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் – தன் கண் சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக்கடவ விருந்தைப் பார்த்துத் தான் அதனோடு உண்ண இருப்பான், வானத்தவர்க்கு நல்விருந்து – மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல்விருந்து ஆம். இல்லறத்தான் ஒருவர் தனது வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணி உபசரித்து அனுப்பிவைத்த பின்பும் இன்னும் எந்த விருந்தினராவது வரமாட்டாரா? வந்தால் அவரோடு சேர்ந்து உணவருந்தலாமே என்று எதிர்பார்த்துக் […]

Continue Reading

அதிகாரம் – 9 – குறள் – 83

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. விளக்கம்:- வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை, பருவந்து பாழ்படுதல் இன்று – நல்குரவான் வருந்திக் கெடுதல் இல்லை. வருவிருந்து – தன்னைநோக்கி வந்த விருந்தை வைகல் – நாள்தோறும் புறந்தருவானது (புறந்தருதல்) – பாதுகாத்தல் விருந்தினரை உபசரித்து உணவளிப்பது ஒரு நாள் மட்டும் செய்ய வேண்டிய கடமை அல்ல. நாள்தோறும் தவறாது செய்ய வேண்டிய கடமையாகும். […]

Continue Reading