அதிகாரம் – 9 – குறள் – 88
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். விளக்கம்:- பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் – நிலையாப் பொருளை வருந்திக் காத்துப் பின் அதனை இழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோடு இலமாயினேம் என்று இரங்குவர், விருந்து ஓம்பி வேள்வி தலைப்படாதார் – அப்பொருளான் விருந்தினரை ஓம்பி வேள்விப்பயனை எய்தும் பொறியிலாதார். பொருள் வளம் இருக்கின்றபோது வீட்டிற்கு வரும் விருந்தினரை நல்லபடியாகப் பேணி உபசரிக்காதவர் ஒருநாளிலே எல்லாப் பொருளையும் இழந்துபோனோமே என்று நிச்சயம் புலம்ப நேரிடும். […]
Continue Reading