அதிகாரம் – 9 – குறள் – 87

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். விளக்கம்:- வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை – விருந்தோம்பல் ஆகிய வேள்வியின் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று, விருந்தின் துணைத் தணை – அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு. இக்குறளிலே திருவள்ளுவர் விருந்தை வேள்வி என்று கூறுகிறார். வேள்வி ஐந்து வகைப்படும். பிரம்ம யக்ஞம் தேவ யக்ஞம் பிதுர் யக்ஞம் பூத யக்ஞம் மானுட யக்ஞம் பிரம்ம யக்ஞம்:- பரம்பொருளைத் தேடி அதற்காகச் செய்யப்படுவது. […]

Continue Reading